Vettri

Breaking News

மசகு எண்ணெய் விலை சற்று வீழ்ச்சி !





 ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலை அடுத்து சர்வதேச சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றது

இதன்படி, மசகு எண்ணெய் விலை இன்றைய தினமும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.08 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.61 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.17 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

No comments