Column Left

Vettri

Breaking News

மாவீரர் தின நினைவேந்தலுக்கு தடை உத்தரவு கோரி யாழ், கோப்பாய் பொலிஸார் மனு தாக்கல் : விசாரணை நவ. 27இல்!




 




யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிடுமாறு கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் இன்றைய தினம் சனிக்கிழமை (25) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை (27) காலை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கோப்பாய் துயிலும் இல்லம், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக அமைக்கப்பட்ட நினைவு மண்டபம் என்பவற்றில் மாவீரர் தின நினைவேந்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு தடை விதிக்குமாறு கோரியே பொலிஸாரால் மனு தாக்கல் செய்யப்பட்டது.

No comments

Subscribe Us