Column Left

Vettri

Breaking News

தம்புள்ள ஒளராவின் வெற்றியை இலகுவாக்கிய அவிஷ்கவின் அதிரடி..




 கோல் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் அவிஷ்க பெர்னாண்டோ குவித்த அதிர அரைச் சதத்தின் உதவியுடன் தம்புள்ள ஒளரா  7 விக்கெட்களால்   இலகுவாக வெற்றிபெற்றது.

கோல் டைட்டன்ஸ்  நிர்ணயித்த  134 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள ஒளரா 17.4 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து உரிய இலக்கை அடைந்து வெற்றியீட்டியது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவிஷ்க குணவர்தன 49 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 70 ஓட்டங்களைக் குவித்தார்.

ஆரம்ப விக்கெட்டில் குசல் மெண்டிஸுடன் 47 ஓட்டங்களைப் பகிர்ந்த அவிஷ்க பெர்னாண்டோ, 2ஆவது விக்கெட்டில் சதீர சமரவிக்ரமவுடன் மேலும் 36 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

குசல் மெண்டிஸ் 18 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

குசல் பெரேரா மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினார். அவர் 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

பந்துவீச்சில் லஹிரு குமார 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கோல் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து வீரர் சட் போவ்ஸ் (220, அணித் தலைவர் தசுன் ஷானக்க (36 ஆகிய இருவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

அவர்களை விட டிம் சீஃபேர்ட் (15), ஷக்கிப் அல் ஹசன் (13), சொஹான் டி லிவேரா (12) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் துஷான் ஹேமன்த 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

இந்தப் போட்டி முடிவை அடுத்து தம்புள்ள ஒளரா 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முதலிடத்தில் உள்ளது.

No comments