Column Left

Vettri

Breaking News

மண்ணை கவ்விய இந்திய அணி..! 4 ஓட்டங்களால் திரில் வெற்றியடைந்த மே. தீவுகள்




இந்திய கிரிக்கெட் அணியுடனான முதலாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியானது தாரூபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியமில் இன்று நடைபெற்றது, இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இந்திய அணிக்கான வெற்றி மண்ணை கவ்விய இந்திய அணி..! 4 ஓட்டங்களால் திரில் வெற்றியடைந்த மே. தீவுகள் | Icc Women S T20 World Cup 2023 Today Live மேற்கிந்திய தீவுகள் அணிகள் பொறுத்தவரை பூரன் 34 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்களும், கேப்டன் ரோவ்மேன் பவல் 32 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்களும் பொறுப்புடன் குவித்து இருந்தனர். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்கள் குவித்து இந்திய அணிக்கான வெற்றி இலக்கை நிர்ணயித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். இவர்களைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ்(21),ஹர்திக் பாண்டியா(19), சஞ்சு சாம்சங்(12) மற்றும் அக்சர் படேல்(13) ஆகிய வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி இந்திய அணியை பரிதாபமான நிலைக்கு கொண்டு சென்றனர். 4 ஓட்டங்கள் வித்தியாசம் மண்ணை கவ்விய இந்திய அணி..! 4 ஓட்டங்களால் திரில் வெற்றியடைந்த மே. தீவுகள் | Icc Women S T20 World Cup 2023 Today Live இளம் வீரர் திலக் வர்மா மட்டும் தன்னுடைய பங்கிற்கு 22 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சருடன் 39 ஓட்டங்கள் சேர்த்து ரசிகர்களுக்கு ஆறுதல் வழங்கினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது. இதன்மூலம் இந்திய அணியை 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணிகள் திரில் வெற்றி பெற்றுள்ளது.

No comments