Column Left

Vettri

Breaking News

தசுன் சானக்க தலைமையிலான 15 பேர் கொண்ட குழாம் - ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக பரிந்துரைப்பு




ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்ட குழாமில் குசல் ஜனித் பெரேராவும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பங்களாதேஸ் மற்றும் ஆப்கானிஸ்தானையும் உள்ளடக்கி எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் B பிரிவில் இலங்கை அணி போட்டியிடவுள்ளது. அதற்காக, தசுன் சானக்க தலைமையிலான 15 பேர் கொண்ட குழாம் பரிந்துரைக்கப்பட்டு, தற்போது விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களின் பின்னர், குசல் ஜனித் பெரேரா இலங்கை ஒருநாள் அணி குழாமில் இணைக்கப்பட்டுள்ளதுடன், துனித் வெல்லாலகேவும் சேர்க்கப்பட்டுள்ளார். துஷ்மந்த சமீர, லஹிரு குமார மற்றும் மத்திஷ பத்திரன ஆகிய வேகப்பந்துபிவீச்சாளர்களும் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர். ஆசிய கிண்ண போட்டிக்கான இலங்கை அணி விபரம் தசுன் சானக்க தலைமையிலான 15 பேர் கொண்ட குழாம் - ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக பரிந்துரைப்பு | Asiacup2023 Srilanaka Squad தசுன் ஷனக (C),பாத்தும் நிஸ்ஸங்க ,திமுத் கருணாரத்ன ,குசல் ஜனித் பெரேரா ,குசல் மெண்டிஸ் ,சரித் அசலங்கா ,சதீர சமரவிக்ரம ,தனஞ்சய டி சில்வா,வனிந்து ஹசரங்க துனித் ,வெல்லலகே மகேஷ் தீக்ஷனா ,லஹிரு குமார, துஷ்மந்த சமீர ,தில்ஷான் மதுஷங்க, மதீஷ பத்திரன

No comments