Column Left

Vettri

Breaking News

அம்பாறை மாவட்டத்தில் சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன் அமைப்பின் ஒன்றுகூடல் ...!




(எம்.என்.எம்.அப்ராஸ்) சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன் (INTERNATIONAL HUMAN RIGHTS GLOBAL MISSION)அமைப்பின் ஒன்றுகூடல் ஒலுவில் எம்.ஆர்.ஐ.ரெஸ்டுரென்டில் நேற்று (27) இடம்பெற்றது. சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன்(INTERNATIONAL HUMAN RIGHTS GLOBAL MISSION)அமைப்பின் தேசிய தலைவர் ஏ.ஆர்.அமீர்கான் அவர்களின் வழிகாட்டலில் அமைப்பின் பணிப்பாளர் எஸ்.எல்.றசீட் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன்(INTERNATIONAL HUMAN RIGHTS GLOBAL MISSION)அமைப்பின் மூலம் அம்பாரை மாவட்டத்தில் எதிர்காலத்தில் மேற்க்கொள்ள வேண்டிய சமூக நல செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. மேலும் நிகழ்வின் அங்கமாக பொது மக்களின் நலன் கருதி பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்து வரும் கிழக்கு இளைஞர் அமைப்பின் தவிசாளர் தானிஸ் றஹ்மத்துல்லா சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன் அமைப்பினரால் கெளரவிக்கப்பட்டார். M.N.M.Afras 0772961631 journulist

No comments

Subscribe Us