Column Left

Vettri

Breaking News

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது!!!




பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் ஏற்பாட்டில் நடை பெற்ற இக் கூட்டத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர் சிறிநாத், இரா.சாணக்கியன் மற்றும் பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தின் போது இந்த வருடத்தில் பிரதேச செயலகம், பிரதேச சபை, மற்றும் ஏனைய திணைக்களங்கள் சார்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது டன்., முடிவுறுத்த படாமல் இருக்கும் வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தி முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் வீதிகளில் இடைஞ்சலாக காணப்படும் மின் கம்பங்களை அகற்றுதல் முந்திரியை செய்கைக்காக வழங்கப்பட்ட காணி மற்று மகிழூர் குடிநீர் திட்டம் போன்றனவும், பிரதேச சபை ஊடாக குப்பைகளை அகற்றி டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தல் தொடர்பாகவும் ஆரயாப்பட்டதுடன். களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் பல நாட்களாக கழிவகற்றல் அகற்றல் செயற்பாடுகள் இடம் பெறாமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, ஞா.சிறிநேசன், வைத்தியர் சிறிநாத் ஆகியோர் பிரதேச சபை தவிசாளரிடம் வினவினர் இதற்கு பதிலளித்த தவிசாளர் வைத்தியசாலையில் இயங்கி வரும் கருவள சிகிச்சை நிலையத்தினை தொடர்ந்து நடாத்துவதற்கான பணத்தை வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினர் வழங்க வேண்டும் என தான் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அதற்கிணங்க அவர்கள் பணத்தினை வழங்காத காரணத்தினால் கழிவகற்றும் பணியை நிறுத்தியுள்ளாதாகவும் தவிசாளர் பதிலளித்தார். இதனை மறுத்து பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் உண்மையில் நலன்புரி சங்கத்தினர் பணம் வழங்காவிட்டால் அதனை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் அதனை விடுத்து வைத்தியசாலையில் கழிவகற்றாமல் விட்டால் பாதிக்கப்படுபவர்கள் நலன்புரி சங்கத்தினரோ அல்லது நிருவாகத்தினரோ அல்ல இதனால் பாதிக்கப்படுவது நோயாளிகளே தவிர வேறொரு வரும் இல்லை இந்த நிலை தொடர்ந்தால் வைத்தியசாலையில் தொற்றுக்கள் ஏற்பட்டு பாரிய அனர்த்தம் இடம் பெற வாய்ப்புள்ளது இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் அனைத்திற்கும் தவிசாளரோ பதில் கூறவேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது தவிசாளர் குறிக்கிட்டு பலதடவை உரையாற்றுதலுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதால் ஆத்திரமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் தவிசாளருக்கு நீங்கள் வரையறையை மீறி செயற்படுகின்றீர்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கதைக்கும் போது தவிசாளர் குறிக்கிடுவது வரையறையை மீறும் செயல் கதைப்பதை நிறுத்துங்கள் என தெரிவித்தார். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குறுக்கிட்டு சமரசம் செய்து வைத்தார்......பழுகாமம் நிருபர்

No comments

Subscribe Us