அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்கான இராஜதந்திர மற்றும் சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு!!!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்கான இராஜதந்திர மற்றும் சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அனோஜனின் விவகாரம் தொடர்பான விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை (21) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய இராஜதந்திர, சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்காக சவூதி அரேபிய அதிகாரிகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளை பேணுமாறும், சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து கிடைக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
No comments