Column Left

Vettri

Breaking News

வேனில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!!!




தில்சாத் பர்வீஸ் (சம்மாந்துறை நிருபர்) சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வேனில் வைத்து ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் ஒருவர், ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே, சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரை வேனுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருளும், போதைப்பொருள் விற்பனை அல்லது கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை பணத்தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரையின் பேரிலும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் அவர்களின் நெறிப்படுத்தலிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Subscribe Us