Column Left

Vettri

Breaking News

தப்போவ பகுதியில் தடை செய்யப்பட்ட தங்கூஸ் வலைத் தொகுதியுடன் ஒருவர் கைது!!!




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முற்றாகத் தடைசெய்யப்பட்ட தங்கூஸ் வலைகளைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் புத்தளம் தப்போவ பகுதியில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் மாவட்ட உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் நீரியல்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரிகள் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். புத்தளம் தப்போவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட தேடுதலின்போது, சட்டவிரோத வலை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபரின் மறைவிடத்தை அதிகாரிகள் முற்றுகையிட்டனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையின்போது, தங்கூஸ் நூலைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட சுமார் 20 கிலோகிராம் எடைகொண்ட பாரிய வலைத்தொகுதி அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டது. தப்போவ நீர்த்தேக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீரேந்துப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைக் குறிவைத்து, இந்தத் தங்கூஸ் வலைகளைச் சூட்சுமமாகத் தயாரித்து விநியோகிக்கும் பிரதான நபராக இவர் செயற்பட்டு வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதிகாரி ஜே.என். அத்தபத்து தலைமையிலான குழுவினர், புத்தளம் மாவட்ட உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் இந்த விசேட சுற்றிவளைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments

Subscribe Us