Column Left

Vettri

Breaking News

காணாமல் போன கடற்படை வீரரின் சடலம் கண்டுபிடிப்பு!!




அங்குலான கடற்பகுதியில் இடம்பெற்ற கடற்படை படகு விபத்தில் காணாமல் போயிருந்த கடற்படை அதிகாரியினுடையது என சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்று (04) காலை கடற்படை சுழியோடிகளால் படகிலிருந்து இச்சடலம் மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்தது. கடந்த ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இந்த அதிவேகத் தாக்குதல் படகு 12 கடற்படை வீரர்களுடன் அங்குலான கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது. அந்த நேரத்தில் அங்குலான பொலிஸார் மற்றும் உள்ளூர் மீனவ சமூகத்தின் உதவியுடன் அதில் இருந்த 11 கடற்படை வீரர்கள் காப்பாற்றப்பட்டனர். அதன் பின்னர் காணாமல் போன அதிகாரியைத் தேடி சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் மற்றும் பானந்துறையிலிருந்து கொழும்பு ஊடாக சிலாபம் வரையிலான கடலோரப் பகுதிகளிலும் விரிவான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை தெரிவித்திருந்தது.

No comments

Subscribe Us