Column Left

Vettri

Breaking News

கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு மாநகர சபை நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக மக்கள் கவலை! போக்குவரத்து நெரிசல், வீதி விபத்துகளால் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர் பாதிப்பு!!!




(பாறுக் ஷிஹான்) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொதுச்சந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள போதிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்முனை மாநகர சபை தொடர்ந்தும் மந்தகதியிலேயே செயற்பட்டு வருவதாகப் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். இரவு பகல் பாராது சுமார் 40க்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் கல்முனை நகரிலும் பொதுச்சந்தை வளாகத்திலும் கூட்டமாக உலவி வருகின்றன. இதனால் அன்றாடப் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்படுவதுடன், தொடர்ச்சியாக வீதி விபத்துகளும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. கட்டாக்காலியாக அலைய விடப்பட்டுள்ள மாடுகளை அவற்றின் உரிமையாளர்கள் வீடுகளிலோ அல்லது பண்ணைகளிலோ கட்டி வைத்துப் பராமரிக்க வேண்டும் என மாநகர சபையினால் ஏற்கனவே உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மாட்டின் உரிமையாளர்கள் அதனைப் பொருட்படுத்தாததால் அந்த அறிவித்தல் பயனற்றதாக மாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். அண்மையில் கூட, வீதியில் திரிந்த கட்டாக்காலி மாடு முட்டியதில் ஊடகவியலாளர் ஒருவர் உட்படப் பொதுமக்கள் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையினால் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு, மாநகர சபைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன்போது மாட்டின் உரிமையாளர்கள் தண்டப்பணம் செலுத்தித் தமது மாடுகளை மீட்டுச் சென்றிருந்தனர். எனினும், தற்போது தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகளவான மாடுகள் பொதுச்சந்தைக்குள் புகுந்து வியாபாரிகளுக்கும் நுகர்வோருக்கும் பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கல்முனை மாநகர சபை எவ்விதத் தயக்கமுமின்றி உடனடியாகக் கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதேசவாசிகள் மீண்டும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். -- Thanks & Best Regards, பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) Journalist-මාධ්‍යවේදී FAROOK SIHAN(SSHASSAN) B. F .A (Hons)Diploma-in-journalism(University of Jaffna ) 0779008012-(URGENT) sihanfarook@yahoo.com, sihanfarook@gmail.com,sihanfarook@hotmail.com 0719219055,0712320725,0754548445

No comments

Subscribe Us