கொஸ்கொடவில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி தோல்வி!!
கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த 'கொஸ்கொட தாரக்க' என்பவரின் உறவினர் ஒருவரைக் இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
9 மில்லிமீட்டர் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இருமுறை சுடுவதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ள போதிலும், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் துப்பாக்கி இயங்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments