நியூசிலாந்து பெண்களைக் கவர்ந்த ‘மொரிட்டா அட்வென்ச்சர்ஸ்’: அருகம்பையில் மீன்பிடிப் பயணமும் பார்பிக்யூ விருந்தும்! இலங்கைப் பாரம்பரிய ஆடைகளை அணிந்து மகிழ்ந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள்!!!
( பாறுக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டம் பொத்துவில், அருகம்பைப் பகுதியில் இயங்கி வரும் ‘மொரிட்டா அட்வென்ச்சர்ஸ்’ (Morita Adventures) சுற்றுலா அமைப்பினூடாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இரு இளம் பெண்கள் மீன்பிடிப் பயணத்தில் இணைந்து மறக்க முடியாத அனுபவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பொத்துவில் மீனவரான தஸ்லீமின் வழிகாட்டலில் கடலுக்குச் சென்ற குறித்த சுற்றுலாப் பயணிகள், தாமே ஆர்வத்துடன் மீன்களைப் பிடித்து மகிழ்ந்ததுடன், அன்றைய இரவு வேளையில் தாங்கள் பிடித்த மீன்களைக் கொண்டு சுவையான பார்பிக்யூ (BBQ) விருந்தையும் தயாரித்து உண்டு மகிழ்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து, தஸ்லீமின் இல்லத்திற்கு விஜயம் செய்த அப் பெண்கள், இலங்கையின் தனித்துவமான கலாசாரம் மற்றும் பாரம்பரிய ஆடைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்து கொண்டனர். அத்துடன், நமது பாரம்பரிய உடைகளை ஆசையுடன் அணிந்து புகைப்படங்கள் எடுத்துத் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
அருகம்பைக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குக் கடல்சார் பொழுதுபோக்குச் சேவைகளை வழங்குவதுடன் நின்றுவிடாது, பிராந்தியத்தின் விருந்தோம்பல் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தையும் வெளிநாட்டவர்களுக்கு அறிமுகப்படுத்தி வரும் ‘மொரிட்டா அட்வென்ச்சர்ஸ்’ தஸ்லீமின் இச் செயற்பாடு உள்ளூர் மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றது.
--
Thanks & Best Regards,
பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
Journalist-මාධ්යවේදී
FAROOK SIHAN(SSHASSAN)
B. F .A (Hons)Diploma-in-journalism(University of Jaffna )
0779008012-(URGENT)
sihanfarook@yahoo.com, sihanfarook@gmail.com,sihanfarook@hotmail.com
0719219055,0712320725,0754548445
No comments