Column Left

Vettri

Breaking News

நாடு தழுவிய ரீதியில் இலவச கணித முகாம்!!!




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) நாடு தழுவிய ரீதியில் இவ்வருடம் கல்வி பொதுத் தராதர சாதரண தரம் எழுத உள்ள மாணவர்களை மையமாகக் கொண்டு இடம் பெற்று வரும் இலவச கணித முகாம் அகில இலங்கை வை.எம.எம்.ஏ பேரவை யின் புத்தளம் மாவட்ட பணிப்பாளரும் ஒபெட் அமைப்பின் தலைவருமான எம் ரீ.எம் நபீல் ஆசிரியரால் நடாத்தப்பட்டு வருகிறது. இவ் இலவச கணித முகாமின் முதல் நிகழ்வு சனிக்கிழமை (26) யாழ்ப்பாணம் நாச்சிக்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் இரண்டாவது கணித முகாம் ஞாயிற்றுக்கிழமை (27) யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியிலும் இடம் பெற்றது. இதில் யாழ் ஒஸ்மானியா கல்லூரியும் யாழ் கதீஜா மகளிர் கல்லூரியும் கலந்து கொண்டது. இவ் இலவச கணித முகாமில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் முன்னாள் தலைவர் எம். எஸ். றஹீம் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் யாழ் மாவட்ட பணிப்பாளர் மஹ்றூப் ஏ. காதர் மற்றும் யாழ் வை.எம.எம்.ஏ கிளை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். நாடு தழுவிய ரீதியில் இடம்பெற உள்ள இவ் இலவச கணித முகாம் பற்றிய தகவல்களுக்கு அகில இலங்கை ரீதியில் நகர மற்றும் கிராமஙகளில் உள்ள வை.எம்.எம் ஏ பேரவையின் இணைப்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

No comments

Subscribe Us