Column Left

Vettri

Breaking News

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்’ என உத்தியோகபூர்வ பெயர் மாற்றம்: வக்பு சபை அங்கீகாரம்! நம்பிக்கையாளர் சபையின் நீண்டகால முயற்சிக்கு வெற்றி!!!




(பாறுக் ஷிஹான்) ( ‘R/725/AM/19’ எனும் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளிவாசல்’ எனும் கல்முனைப் பெரிய பள்ளிவாசலின் பெயர், உத்தியோகபூர்வமாக ‘கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நம்பிக்கையாளர் சபையின் நீண்டகால முயற்சியின் பலனாக, இலங்கை வக்பு சபையின் தீர்மானத்தின்படி (WB/BP/46/2026 - 12.08.2026) இந்த உத்தியோகபூர்வப் பெயர் மாற்றத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் வேண்டுகோளை ஏற்று இப் பெயர் மாற்றத்திற்கு அனுமதி வழங்கிய இலங்கை வக்பு சபைக்கும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கும் கல்முனை வாழ் பொதுமக்கள் சார்பில் நம்பிக்கையாளர் சபையினர் தமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். --

No comments

Subscribe Us