Column Left

Vettri

Breaking News

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 900 கிலோ பீடி இலைத் தொகுதி புத்தளம் கங்கேவாடியில் கைப்பற்றிய கடற்படை!!!!




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) இலங்கை கடற்படையினரால் புத்தளம் களப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை ( 2026 செப்டம்பர் 22) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 900 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி கைப்பற்றப்பட்டது. இதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் புத்தளம் கங்கேவாடி விரைவுச் செயற்பாட்டுப் படகுப் படைப்பிரிவு தலைமையகத்திற்கு கிடைத்த நம்பகமான தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், அந்த களப்புப் பகுதியிலுள்ள புதர் காடொன்றில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான 24 உறைகள் பரிசோதிக்கப்பட்டன. இதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு, கடற்படையினரின் நடவடிக்கை காரணமாக கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும், சுமார் 908 கிலோகிராம் பீடி இலைத் தொகுதி இவ்வாறு கைப்பற்றப்பட்டது. மேலும், இந்நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் சுராபரி திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

No comments

Subscribe Us