Column Left

Vettri

Breaking News

2026 தேசிய கடற்கரை கைப்பந்து சாம்பியன்ஷிப்பில் கடற்படை பெண்கள் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது!!!




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) 2026 தேசிய கடற்கரை கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் 2026 செப்டம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களில் நீர்கொழும்பு சாரக்கடை கடற்கரையில் நடைபெற்றதுடன், இதில் கடற்படை 'A' பெண்கள் கடற்கரை கைப்பந்து அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. அதன்படி, இலங்கை கடற்படை பெண்கள் ‘A’ மற்றும் ‘B’ ஆகிய அணிகள் உட்பட தீவின் முன்னணி கடற்கரை கைப்பந்து அணிகள் ஆறின் (06) பங்கேற்புடன் நடைபெற்ற இந்தப் போட்டியில், கடற்படை பெண்கள் ‘A’ அணியும் ‘ஒமேகா லைன்’ அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில் இலங்கை கடற்படை பெண்கள் ‘A’ அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீராங்கனை டபிள்யூ.எஸ். அசங்கா மற்றும் கடற்படை வீராங்கனை டி.எம்.கே.கே. திசாநாயக்க ஆகியோர் 1-2 என்ற சுற்றுக் கணக்கில் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, 2026 ஆம் ஆண்டிற்கான கடற்கரை கைப்பந்து பெண்கள் பிரிவின் இரண்டாம் இடத்தைக் கடற்படைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர். மேலும், கௌரவ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் பங்கேற்புடன் நடைபெற்ற இறுதிப் போட்டி நிகழ்வில் கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கை கைப்பந்து சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் இலங்கை கடற்படை கைப்பந்து குழுவின் செயலாளருமான கமாண்டர் கே.எஸ்.எம். சில்வா கலந்துகொண்டார்.

No comments

Subscribe Us