ஸ்ரீ லங்கா ஐக்கிய காங்கிரஸின் தினச்சுடர் தேசிய விருது விழா 2026!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
ஸ்ரீ லங்கா ஐக்கிய காங்கிரஸ் ஏற்பாட்டில் தினச்சுடர் தேசிய விருது விழா 2026 இரண்டாம் கட்டம் கொழும்பு பொது வாசிகசாலை மண்டபத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை (17) அன்று காலை 9 மணிக்கு தினச்சுடர் பத்திரிகையின் ஆசிரியர் மூத்த ஊடகவியலாளர் ஏ எம் முபாரக் தலைமையில் நடைபெற உள்ளது
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஷாஷிம் உமர் பவுண்டேஷன் ஸ்தாபகரூம் தலைவருமான புரவலர் ஹாஷிம் உமர் கௌரவ அதிதிகளாக தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேஷன், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம் உவைஸ் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
மேற்படி விருது விழாவில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர், கவிஞர்கள், கவிதாயினிகள், புகைப்பட கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர், திரைப்பட கலைஞர்கள், பாடகர்கள், நடிகர்கள், இலக்கியவாதிகள், மேடை நாடக கலைஞர்கள், பாடலாசிரியர்கள், சமூக சேவையாளர், நூலாசிரியர்கள், அழகு கலை நிபுணர்கள் , விளையாட்டு வீரர்கள் என 46 பல்துறை ஆளுமைகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது
No comments