Column Left

Vettri

Breaking News

தந்தையை குத்திக் கொலை செய்த 16 வயது மகன்!




மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே மகன் இந்தக்கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Subscribe Us