Column Left

Vettri

Breaking News

சம்மாந்துறையில் வீதியோர மீன் விற்பனைக்கு எதிராக சிறப்பு சோதனை; 12 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!!




(தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை நிருபர்) சம்மாந்துறை பிரதேசத்தில் பொது வீதியோரங்களில் மீன் விற்பனை செய்வோரைக் குறிவைத்து சிறப்பு வர்த்தக சோதனை நடவடிக்கை நேற்று (17) முன்னெடுக்கப்பட்டது. சம்மாந்துறை பிரதேச சபையின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்தச் சோதனை நடவடிக்கையில், சிறப்பு அதிரடிப்படை (STF), பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகத்தைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள் (PHII) உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போது, பொது வீதிகளில் மீன் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பான விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் 12 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 50,000 ரூபாய் பிணைத் தொகையில் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பொது வீதிகளில் உணவுப் பொருட்கள், குறிப்பாக மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும்போது உரிய சுகாதார மற்றும் சட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென அதிகாரிகள் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், விதிமுறைகளை தொடர்ந்து மீறி வீதியோரங்களில் மீன் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பொதுமக்களின் சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வீதி ஒழுங்கை உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Subscribe Us