Column Left

Vettri

Breaking News

சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளைப் பிடித்த 07 சந்தேகநபர்கள் சட்டத்தின் பிடியில்!!!




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) இலங்கை கடற்படையினரால் மன்னார் யஹப்பார் மற்றும் யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்கரைப் பகுதிகளில் 2026 செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரு தினங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், அனுமதிப்பத்திரமின்றி கடல் அட்டைகளை கடத்திச் சென்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் இரவு நேரங்களில் கடலில் சுழியோடி கடல் அட்டைகளைப் பிடித்த ஏழு (07) நபர்களுடன், மூன்று (03) படகுகள் மற்றும் 1,400 கடல் அட்டைகள் அடங்கிய தொகையும் சட்டத்தின் பிடியில் கொண்டுவரப்பட்டன. அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் புவனெக நிறுவனத்தினால் நாச்சிக்குடா, யஹப்பாறு கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, அனுமதிப்பத்திரமின்றி கடல் அட்டைகளை கடத்திச் சென்ற மூன்று (03) சந்தேகநபர்களுடன், 550 கடல் அட்டைகள் அடங்கிய ஒரு (01) படகு புதன்கிழமை (2026 செப்டம்பர் 16) கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதேபோன்று, வடக்கு கடற்படை கட்டளையின் வெற்றிலைக்கேணி கடற்படை நிறுவனத்தினால், குடாரப்பு கடற்கரைப் பகுதியில் வியாழக்கிழமை (2026 செப்டம்பர் 17) காலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் கடலில் சுழியோடி கடல் அட்டைகளைப் பிடித்த நான்கு (04) சந்தேகநபர்களுடன், 850 கடல் அட்டைகள் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகள் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. இந்த நடவடிக்கைகளினூடாக கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சந்தேகநபர்கள் 29 முதல் 46 வயதுக்குட்பட்ட மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள், கடல் அட்டைகள் அடங்கிய தொகுதி மற்றும் படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கான கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அலுவலகங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

No comments

Subscribe Us