Column Left

Vettri

Breaking News

ரயில் பாதையில் சடலம் கண்டெடுப்பு - ரயில் சேவைகளில் தாமதம்!!




பிரதான ரயில் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதத்துடன் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கம்பஹா மற்றும் தாரளுவ இடையிலான ரயில் பாதையில் கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை அப்புறப்படுத்தும் வரை ரயில் சேவைகள் தாமதத்துடன் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments