அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாவிதன்வெளி மத்திய குழு தெரிவு!!
பாறுக் ஷிஹான்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேசத்திற்கான புதிய மத்திய குழுவைத் தெரிவு செய்யும் விசேட நிகழ்வு நேற்று (31) நாவிதன்வெளியில் இடம்பெற்றது.
நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் லதீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கட்சியின் மாவட்ட செயற்குழு தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
மேலும், கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் உப தலைவரும் அக்கறைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ், அக்கறைப்பற்று மாநகர சபை உறுப்பினர் சபூர் ஆதம், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ். முஹம்மட் அலி ஜின்னா, கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளருமான ஜௌபர் உட்பட நாவிதன்வெளி பிரதேச சபை வேட்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, நாவிதன்வெளி பிரதேசத்திற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய மத்திய குழு ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டது.
தலைவர்: ஏ.பி. சபூர் முகைதீன்,செயலாளர்: எஸ். ஜபாத்,பொருளாளர்: என்.எம். நிசாத்,உப தலைவர்: ஏ.எம்.ஜே. ஹஸன்,உப செயலாளர்: ஏ.எம். றிஸான்,கொள்கை பரப்பு செயலாளர்: என்.எம். ஆசிக்இவர்களுடன் மேலும் 13 நிர்வாகக் குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டு, புதிய மத்திய குழு உத்தியோகபூர்வமாக அமைக்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், "நாவிதன்வெளி பிரதேசத்தில் கட்சியின் அமைப்புக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் புதிய நிர்வாகம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் மக்கள் மையப்படுத்தப்பட்ட அரசியலைத் தொடர்வதே கட்சியின் முதன்மை நோக்கமாகும்" எனக் குறிப்பிட்டார்.
நிகழ்வின் நிறைவில், தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகளை ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுக்க அனைவரும் உறுதியளித்தனர்.
--
No comments