Column Left

Vettri

Breaking News

சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்!!




பாறுக் ஷிஹான் மாநகரசபை தீயணைப்புப் பிரிவின் மந்தநிலைக்கு வர்த்தகர்கள், பொதுமக்கள் கடும் அதிருப்தி சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல 'பில் பில்' (Fil Fil) உணவகத்தில் இன்று (01) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள், சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் களப் பணியாளர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இத்தீ விபத்துக்கான பின்னணி மற்றும் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. தீயணைப்புப் பிரிவு மீது அதிருப்தி: இதேவேளை, தீ விபத்து இடம்பெற்று அனைத்தும் எரிந்து சாம்பலான பின்னரே கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரின் இத்தகைய மந்தமான செயற்பாடு தொடர்கதையாகி வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். பாரிய வர்த்தக நகரமாக விளங்கும் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி, மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினை வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைக்க உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்களும் வர்த்தகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments