Column Left

Vettri

Breaking News

நந்தவன சித்திவிநாயகரின் ஆடி மகோற்சவம் பெருவிழா திங்கள் ஆரம்பம்!




( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த ஆடி மகோற்சவத் திருவிழா எதிர்வரும் திங்கட்கிழமை (03) கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. அதற்காக, நாளை(2) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் கர்மாரம்ப கிரியைகள் ஆரம்பமாகும். தொடர்ந்து, ஒன்பது நாட்கள் திருவிழாக்கள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் முன்னிலையில் , உற்சவகாலபிரதம குரு சிவஸ்ரீ க.திருக்குமாரக் குருக்கள் தலைமையில் நடைபெறும். பத்தாம் நாள், எதிர்வரும் 12ஆம் தேதி புதன்கிழமை காலை ஆடி அமாவாசைத் திதியும், பூச நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய அன்று சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெறும். திருவிழா காலங்களில் தினமும் காலை எட்டு மணிக்கு அபிஷேக பூஜையுடன் ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு உள்வீதி வெளிவீதி உலாவுடன் திருவிழாக்கள் இடம்பெறும் என ஆலய தர்மகர்த்தாக்களான இரா.திருநாவுக்கரசு, கே.ஜெகமோகன் ஆகியோர் தெரிவித்தனர்.

No comments