காலாவதியான ஆயுர்வேத மருந்துகள் மற்றும் விதிமுறைகளை மீறிய அழகுசாதனப் பொருட்கள் விற்பனை – ரூ.1 லட்சம் அபராதம்!!!
காலாவதியான ஆயுர்வேத மருந்துகள் மற்றும் கட்டாய லேபிள் தகவல்கள் இல்லாத அழகுசாதனப் பொருட்களை விற்பனைக்காக சேமித்து வைத்திருந்த குற்றச்சாட்டில், கொழும்பு 13-ஐச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கும் அதன் பணிப்பாளருக்கும் மொத்தமாக ரூ.1 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில், நிறுவனம் மற்றும் அதன் பணிப்பாளர் மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த மே 20 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில், 640-க்கும் மேற்பட்ட காலாவதியான ஆயுர்வேத மருந்துகளும், 280-க்கும் அதிகமான விதிமுறைகளை பின்பற்றாத அழகுசாதன மற்றும் பிற பொருட்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.
மேலும், கைப்பற்றப்பட்ட அனைத்து மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களையும் உடனடியாக அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments