Column Left

Vettri

Breaking News

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்களினால் (ROBOTIC EXHIBITION) புத்தாக்க கண்காட்சி போட்டிகள் ஏற்பாடு...!!




ROBOTIC EXHIBITION) எனும் தொழிநூட்பத்தினுடாக மாணவர்களுக் கிடையில் புதைந்து கிடக்கும் திறமைகளை வெளிப்படுத்தும் புத்தாக்க கண்டுபிடிப்பானது ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் இளம் கண்டு பிடிப்பாளர்களின் திறமைகளை காட்சிப்படுத்தப்படும் செயற்பாடு அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இன்றைய தினம் (03) பாடசாலையின் அதிபர் திரு.ஜே. ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.ஆர். உதயகுமார் அவர்கள் பிரதம அதிதியாகவும் ஆலையடி வேம்பு கோட்டக்கல்வி அதிகாரி திரு.எஸ்.செல்வம் அவர்களும் அதிதிகாளாக கலந்து சிறப்பித்தனர். பாடசாலையின் பிரதி அதிபர்களான திரு.க.ஜயந்தன், திரு.இரா.சதீஸ் திரு.கி.மகேஸ்வரன் உதவி அதிபர்.திருமதி. க.கிருபராணி, மற்றும் இவ் போட்டி நிகழ்விற்கு நடுவராக வருகை தந்த M.Z.ரிஸ்வான் அவர்களும் மேலும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் சொ.பி.அகிலன், ஆசிரியர்கள், ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி இளம் கண்டுபிடிப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியின் அனைத்து தகவல் தொடர்பாடல் ஆசிரியர் குழுவினர் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments