Column Left

Vettri

Breaking News

தேசிய சேமிப்பு வங்கியினால் தரம்5 புலமைபரிசில் வழங்கும் நிகழ்வு!!




ஜே.கே.யதுர்ஷன்.. தம்பிலுவில்... இளைய மனங்களை ஊக்கப்படுத்தி ஔிமயமான நாளை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கி கிளையின் ஏற்பாட்டில் தம்பிலுவில் மத்திய மகாவித்தியால ஒன்று கூடல் மண்டபத்தில். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கியினால் வங்கி வாடிக்கையிளர்களில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் மாணவர்களில் தரம் 05 புமைப்பரிசில் 2023,2024,2025 ஆண்டுகளில் சித்தியடைந்த 100 மேற்பட்ட மாணவர்களுக்கு புலமைபரிசில் சான்றிதழ் மற்றும் பரிசுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய தேசிய பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் திரு.N.ஜனன் தலைமையிலும் வங்கியின் உத்தியோத்தர்களின் ஒத்துழைப்புடனும் இடம்பெற்றது.... இவ் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக தேசிய சேமிப்பு வங்கியின் உதவிப் பொதுமுகாமையாளர் திரு.ALA.ஹலீம் மற்றும் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் திரு.S.சசிகுமார்,திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் R.உதயகுமார்,தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய அதிபர் k.கங்காதரன்,கிழக்கு பிராந்திய முகாமையாளர். K.சன்சயன்,தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் திரு.N.ஜனன், ஓய்வு பெற்ற உதவி முகாமையாளர் Mr. U. L. Rafeek ஓய்வு பெற்ற முகாமையாளர் Mr. Vivekanantharaja, ஆகியோர் கலந்து கொண்டனர்.... மேலும் வருகை தந்த அதிதிகளை தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கி கிழையினால் கௌரவிக்கப்பட்டனர் குறிப்பிடத்தக்கது.... குறித்த நிகழ்வானது ஒரு சிறந்த சேமிப்பை இளம் பருவத்தில் இருந்து ஊக்குவிக்கும் முகமாக இடம்பெற்றது மேலும் குறிப்பிடத்தக்க விடயமாகும்்...

No comments