Column Left

Vettri

Breaking News

சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன் மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிக்குத் தெரிவாகி சாதனை




 சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன் மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிக்குத் தெரிவாகி சாதனை


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் நடைபெற்ற வலய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் 60 மீற்றர் ஓட்டப்போட்டியில் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய மாணவன் எம். ஆகிப் நஸீர் இரண்டாம் இடத்தைப் பெற்று, மாகாண மட்டத்திற்கும் தெரிவாகி, பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பாடசாலை அதிபர் கே.எல்.ஏ. ஜௌபரின் வழிகாட்டலில், உடற்கல்வி ஆசிரியர் ஏ.ஜீ. அஸ்ஹர், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எம்.எஸ்.எம். நுஸ்கி, ஏ.ஜீ. மஸ்பூத் ஆகியோரின் பயிற்றுவிப்பில், மாணவர்களின் முழுமையான ஈடுபாட்டில் இச் சாதனைப் பெருமை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்திற்கு கிடைத்துள்ளது.

நேற்று முன்தினம் (08) திங்கட்கிழமை நடைபெற்ற காலைக் கூட்ட நிகழ்வில், வலய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் சாதனை நிலை நாட்டிய மாணவனை அதிபர், ஆசிரியர்கள் பாராட்டிக் கௌரவித்தனர்.

No comments