Column Left

Vettri

Breaking News

கல்முனை மாநகரில் களைகட்டிய சந்தான ஈஸ்வரரின் மாபெரும் அழகு ரதபவனி!




இன்று கல்முனை மாநகரில் களைகட்டிய சந்தான ஈஸ்வரரின் மாபெரும் அழகு ரதபவனி! ( களத்தில் இருந்து வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நகர் வளர் கெளரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ மாபெரும் மாநகர அழகு ரதபவனி இன்று (01) புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது. ஆலயத் தலைவர் பிரபல தமிழாசான் வே.செவ்வேட்குமரன் தலைமையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா 01.04.2026 (புதன்கிழமை) இன்று அதிகாலை முதல் நடைபெற்றது. முன்னதாக, பறவைக்காவடிகள் செல்ல தொடர்ந்து காவடிகள் மூன்று தேர்கள் மாநகரினூடாக அசைந்து அசைந்து வந்த காட்சி அனைவரையும் கவர்ந்தது. அலங்கார சித்திரத் தேர்களை பெண்கள் வடம்பிடித்து ஆறு மணி நேரமாக இழுத்து வந்தார்கள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பட்டாசுகள் முழங்க ரதங்கள் பவனி வந்தமை கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. முழு மாநகரமே அதிர்ந்து. கல்முனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் சந்திரசேகரன் ராஜன் தலைமையில் பக்தர்களுக்கு இளநீர் வழங்கினர். அதேபோன்று பல அமைப்புகள் இடையிடையே நீராகாரம் வழங்கினர். கொளுத்தும் வெயிலிலும் பக்தர்கள் சளைக்காமல் பக்தி பூர்வமாக ரதபவனியில் பங்கேற்றமை உணர்வாக இருந்தது. நாளை தீர்த்த உற்சவம் 02.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெற்று மஹோற்சவம் நிறைவுறும் .

No comments