Column Left

Vettri

Breaking News

சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையில் புனித நோன்புப் பெருநாள் தினம் அனுஷ்டிப்பு!!




(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது கமு/கமு/ அல்ஹிலால் வித்தியாலயத்தில் புனித நோன்புப் பெருநாள் தினம் (Eid Festival day) இன்று (27) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் 
வெகு விமர்சையாக  அனுஷ்டிக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஸ்மா அப்துல் மலீக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிஷாத், இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் 'அதிபர் திலகம்' யூ.எல்.நசார், இப் பாடசாலையின் முன்னாள் அதிபரும் தற்போது சாய்ந்தமருது  அல் - கமரூன் வித்தியாலயத்தின் அதிபருமான எம்.எச். நுஸ்ரத் பேகம், மாளிகைக்காடு சபீனா வித்தியாலய பிரதி அதிபர் எஸ்.எம்.உவைஸ், கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம். அன்சார் மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.எச். லாபிர், ஏ.பி. ரோஷன் டிப்ராஸ், ஒழுக்காற்றுக்குப் பொறுப்பான ஆசிரியர் எம்.எஸ்.எஸ். ஷிப்லி, உதவி அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

No comments