Column Left

Vettri

Breaking News

இன்று மலையகத்தில் முதல் தடவையாக சுவாமி விபுலானந்தரின் 134 வது ஜனன தினக் கொண்டாட்டம் ; பூண்டுலோயாவில் ஒஸ்கார் நிறுவிய சிலை முன்றலில்!!




( வி.ரி.சகாதேவராஜா)

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 134 வது ஜனன தினம் மலையகத்தில் முதல் தடவையாக இன்று (27) வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது .

பூண்டுலோயா விவேகானந்த மகா வித்தியாலயத்தில்,  வித்யாலய அதிபர் ஆறுமுகம் ரவீந்திரன் தலைமையில் மிகவும் சிறப்பாக வரலாற்றில் முதல் தடவையாக ஒஸ்கார் நிறுவிய சுவாமி சிலை முன்றலில் நடைபெற்றது.

அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் மக்கள் ஒன்றியத்தின் (ஒஸ்காரின்) முன்னாள் தலைவர் கந்தசாமி பத்மநாதனின் முன்னெடுப்பில், கடந்த மாதம் (07.02.2026) வரலாற்றில் முதல் தடவையாக அங்கு சுவாமிகளின் திருவுருவச் சிலைகள் நிறுவப்பட்டன.

அங்கு நிறுவப்பட்ட சுவாமி விபுலானந்தரின் சிலை முன்றலில் முதல்தடவையாக 134 வது  ஜனன தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

 பாடசாலை மாணவர்கள் அனைவரும் அங்கு ஒன்று கூடி சுவாமிகளின் "வெள்ளைநிற மல்லிகையோ.. "என்ற பாடலை பாடியதுடன் பல மாணவர்கள் முன் வந்து சுவாமி விபுலாநந்தர் தொடர்பான சிறப்பு பேச்சுகளையும் பேசினர் .

வித்தியாலயஅதிபர் ஆறுமுகம் ரவீந்திரன் சுவாமிகள் தொடர்பான சிறப்புரை நிகழ்த்தினார் .

சுவாமிகளின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து புஷ்பாஞ்சலியும் ந
செலுத்தப்பட்டது .

மலையக வரலாற்றில் இன்று பூண்டுலோயாவில் இவ் விழா  முதல் தடவையாக  நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

No comments