விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் பயிற்சி பெற்ற 158 பல்துறையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா !!
( வி.ரி. சகாதேவராஜா)
இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு கல்லடி விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 158 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (16) சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
கல்லடி இராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமத்தின் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜி மஹராஜ் தலைமையில் கல்லடி விபுலானந்த மணிமண்டபத்தில் இப் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அடிகள் அழகியல் கற்கைகள் நிறுவன பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கென்னடி கலந்து சிறப்பித்தார்.
ஏனைய அதிதிகளும் கலந்து சிறப்பித்த இவ்விழாவில் கராட்டி பண்ணிசை மிருதங்கம் யோகா பரதநாட்டியம் கர்நாடக சங்கீதம் வயலின் கணினி வர்ணம் பூசுதல் ஆங்கிலம் சிங்களம் ஆகிய பல்துறை பயிற்சிகளைப் பூர்த்தி செய்த 158 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டன.
No comments