Column Left

Vettri

Breaking News

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது.!!




 




கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் கிளிநொச்சி பொலிசாரும், தர்மபுரம் பொலிசாரும் இணைந்து குறித்த நடவக்கையில் ஈடுபட்டனர்.


புளியம்பொக்கனை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 85 kgவுக்கும் அதிகமான கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.


சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகித்து பளை பகுதியைச் சேர்ந்த ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரது வீட்டை  வாடகைக்கு பெற்று அங்கிருந்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

No comments

Subscribe Us