Column Left

Vettri

Breaking News

தாக்குதலுக்கு உள்ளான வேட்பாளரிடம் நலம் விசாரித்த தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்




 






பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் காயமடைந்த தேசிய காங்கிரஸின் வீரமுனை  வட்டார வேட்பாளர் ஏ.சி.எம்.சஹீலை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த தேசிய காங்கிரஸ்  தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை(14) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வருகை தந்து சென்ற பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உட்பட ஆதரவாளர்களால்  வீரமுனை  வட்டார வேட்பாளர் ஏ.சி.எம்.சஹீல் உட்பட அவரது ஆதரவாளர்கள் தாக்குதலுக்கு  உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்  தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us