Vettri

Breaking News

நேற்று தரவைப் பிள்ளையார் ஆலய மாம்பழத்திருவிழா; நாளை தீர்த்தம்!!!




 ( வி.ரி.சகாதேவராஜா)

 வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை தரவை பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் மாம்பழத் திருவிழா நேற்று  (10) திங்கட்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் வருடாந்த  
திருவிழா தற்போது சிறப்பாக காலை இரவு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்று வருகிறது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பத்மலோஜன் குருக்கள் முன்னிலையில், ஆலய பரிபாலன சபையின் தலைவர் கே.நாகராஜா  தலைமையில்  பரிபாலன சபையினரும் பக்தர்களும் திருவிழாவை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று மாலை யானையுடன் கூடிய பிரமாண்டமான நகர்வலம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

நாளை தீர்த்தம் இடம்பெற்று மகோற்சவம் நிறைவடையும்.





No comments