Column Left

Vettri

Breaking News

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் சகோதரர் அமீர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை முன்னிலையில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு..!




ஏ.எஸ்.எம்.அர்ஹம் 

அட்டாளைச்சேனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினரும், அமைப்பாளரும், பொதுத்தேர்தல் வேட்பாளரும், தொழிலதிபருமான ஏ.கே.அமீர் இன்று (27) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான கெளரவ ரவூப் ஹக்கீம் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தின் கட்சியின் வளர்சிக்கு முழு மூச்சாக தானும் தனது ஆதரவாளர்களும் செயற்படுவதாக தலைவரிடம் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் தேசிய பொருளாளரும், முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான றஹ்மத் மன்சூர் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அம்பாரை மாவட்ட செயலாளருமான ஏ.சீ.சமால்தீன், கட்சியின் உயர்பீட உறுப்பினரும் பாலமுனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.அலியாரும் மற்றும் அமீர் அவர்களின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.


No comments

Subscribe Us