Column Left

Vettri

Breaking News

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!!




 இன்றையதினம் (03) நாட்டின் கிழக்கு, ஊவா, தென் மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வட மாகாணத்திலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில், பிற்பகலில் அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடல் பகுதிகளில்
மட்டக்களப்பு முதல் அம்பாந்தோட்டை ஊடாக காலி வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் காற்றானது மணித்தியாலத்திற்கு சுமார் 25-35 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.


No comments

Subscribe Us