Column Left

Vettri

Breaking News

இரண்டாம் மொழி சிங்கள வகுப்பின் இறுதி நாள் நிகழ்வு




 பாறுக் ஷிஹான்


தென்கிழக்கு பல்கலைக்கழகமும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து நடாத்திய பல்கலைக்கழக ஊழியர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள வகுப்பின் இறுதி நாள் நிகழ்வும் கற்பித்த ஆசிரியர்களை கௌரவிப்பும் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் முனாஸ் முகைடீன் தலைமையில் ஊழியர் மேம்பாட்டு நிலைய கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (18)  இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஊழியர் மேம்பாட்டு நிலைய பணிப்பாளர் சிரேஸ்ட விரிவுரையாளர் எச்.எம் .நிஜாம் கௌரவ அதிதியாக ஊழியர் மேம்பாட்டு நிலைய திட்ட முகாமையாளர் சிரேஸ்ட உதவி பதிவாளர் எம். எச். நபார்  , வர்த்தக முகாமைத்துவ பீட விரிவுரையாளர் எம். சிராஜ் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

மேலும்  அதிதிகளாக ஊழியர் சங்க செயலாளர் முகம்மத் காமில்இ ஊழியர் மேம்பாட்டு நிலைய உத்தியோகத்தர்களான ஏ.ஜி. ரொஸான் ஐ.எம்.  முஸம்மில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் சிங்கள பாடநெறியை கற்பித்த ஆசிரியர்களான கே. துஜோகாந், கே. நந்தினி, எம். யசோதரனி, ஜே. கல்பனி ஆகியோர் பாட நிறைய பூர்த்தி செய்த ஊழியர்களினால் கௌரவிக்கப்பட்டனா்.














No comments

Subscribe Us