Column Left

Vettri

Breaking News

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியால மாணவர்களுக்கு பாடசாலைக்கு மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி செயலமர்வு!!




பாறுக் ஷிஹான்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் SEDR செயற்திட்ட நிதிப் பங்களிப்புடன் பாடசாலை மாணவர்களுக்கு மத்தியஸ்தம் தொடர்பான மூன்று நாள் பயிற்சி செயல் அமர்வு சம்மாந்துறை கமு/சது/முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) நடைபெற்றது.

இந்நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.றினோசா  ஒருங்கிணைப்பில் அப்பாடசாலையின் அதிபர் எம். டி. முஹம்மட் ஜனூபர்   தலைமையில்  பெப்ரவரி 10,11,13 ஆம் திகதிகளில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மட் ஹனீபா  கலந்து கொண்டதோடு வளவாளர்களாக நாவிதன் வெளி பிரதேச செயலக மத்தியஸ்த உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.அன்பாஸ் மற்றும் ஆலயடிவேம்பு பிரதேச செயலக மத்தியஸ்த உத்தியோகத்தர் வீ.லாவன்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 மேலும் இப்பாடசாலையின் பாடசாலை மத்தியஸ்த அலகுற்கு பொறுப்பான ஆசிரியர்களும் கலந்து கொண்டதுடன் இப் பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட 30 மாணவர்களுக்கு அது தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

இப் பயிற்சி செயலமர்வின் மூலம் மாணவர்களுக்கு முரண்பாடு, தொடர்பாடல், கலந்துரையாடல் போன்ற விடயங்கள் மூலம் மத்தியஸ்தம் செய்யும் முறைகள் தொடர்பாக கூறப்பட்டதுடன் மத்தியஸ்தம் செய்யும் பிரயோகரீதியான அறிவினையும் பெற்றுக் கொண்டனர். மேலும் இப் பாடசாலையில் பாடசாலை மத்தியஸ்த அலகும் நிறுவப்பட்டது.







No comments

Subscribe Us