Column Left

Vettri

Breaking News

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமலான இருவர் சடலங்களாக மீட்பு!!




 வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் – புலிபாய்ந்த கல் வீதியை குறுக்கறுத்துச் சென்ற வெள்ள நீரில், அடித்துச் செல்லப்பட்டு காணாமலான இருவர் நேற்று (26) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சந்திவெளி பகுதியைச் சேர்ந்த 71 மற்றும் 52 வயதுகளை உடைய இருவரே உயிரிழந்து சடலங்களாக மீட்கப்பட்டனர். இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சீரற்ற வானிலையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் கடந்த (2 5) அடித்துச் செல்லப்பட்ட இருவர் வாழைச்சேனையில் காணாமலாகினர்.

வாழைச்சேனை புலி பாஞ்சிக்கல் பகுதியில் சனிக்கிழமை (25) மாலை இரண்டு பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமலானதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு செய்திகள் கிடைத்தன. இதனடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இவ்விருவரும் காய்கறிகளை சேகரித்துவிட்டு வயல்களில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது புலிப்பாஞ்சிகல் ஓயாவின் அடித்துச் செல்லப்பட்டனர்.

No comments

Subscribe Us