Column Left

Vettri

Breaking News

கல்லடிப் பாலத்தில் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு மாமல்லபுர கருங்கல் சிலை! துறவிக்கு துறவி அடிக்கல்; கனடா விபுலானந்த சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்பு!!




 ( வித்தகர் வி.ரி.சகாதேவராஜா)


 உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் 
சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு  சுவாமி விபுலானந்தர்  நூற்றாண்டு விழா சபையின்  பூரண ஏற்பாட்டில் ,மட்டக்களப்பு கல்லடி  பாலத்தில், இந்திய மாமல்லபுரத்தில் செதுக்கிய கருங்கல்லாலான  சுவாமி விபுலானந்த அடிகளாரின் திரு உருவச்சிலை நிறுவப்படவிருக்கிறது.

அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ முன்னிலையில்  சுப வேளையில் அடிக்கல் நடும் நிகழ்வு  இடம் பெற்றது . 


 அடிகளாரின் சிலையானது தனி ஒரு     கருங்கல்லால்  நிர்மாணிக்கப்பட உள்ளது.   இதற்கான பூரண ஏற்பாடு அனைத்தும் இந்தியாவில் மாமல்லபுரத்தில்   திறமை வாய்ந்த தமிழ் நாட்டு சிற்பிகளால்   செதுக்கப்பட்டு முடிவுறும் தறுவாயில் இருக்கிறது .

உலகில், சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு தனிக் கருங்கல்லில் சிலை எழுப்பப்படுவதும், கல்லடிப்பாலத்தோடு நெருங்கிய பாடும்மீன் நீரரமகளிர் வரலாறுடைய மண்ணின் மைந்தருக்கு கல்லடிப் பாலத்தில் சிலை எழுப்பப்படுவதும் இதுவே முதல் தடவையாகும்.

அடிகளாரின்  சிலை  அமைப்பு   செயற்குழுவின்    தலைவரான    மட்டக்களப்பின் பிரபல வர்த்தகரான  தேசபந்து  முத்துக்குமார் செல்வராஜா  அதற்காக  தற்போது இந்தியா சென்றுள்ளார்.

மட்டக்களப்பு நூற்றாண்டு விழாச் சபைத்தலைவர் கே. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் 
கனடா விபுலானந்த கலா  மன்ற தலைவர் கே. புருசோத்தமன் , கலாமன்ற செயலாளர் நித்தி சிவானந்தராஜா ஆகியோரும் கனடாவில் இருந்து வந்து கலந்து சிறப்பித்தார்கள்.

 மேலும், காயத்ரி பீட  குருக்கள்   சிவயோக செல்வன்  சாம்பசிவம் ,    அடிகளாரின்  சிலை  அமைப்பு   செயற்     குழுவின்    தலைவர் தேசபந்து மு. செல்வராசா ,  செயலாளர்  ச. .ஜெயராஜா ,  உதவி பொது செயலாளர்  தி ..சரவணபவன் ,இணைச் செயலாளர் ச.சந்திரகுமார் , உப தலைவர்  திருமதி .   ஹரி . திலகவதி ஆகியோரும் அடிக்கல் நடும் நிகழ்வில் பங்கேற்றனர் .

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ. வாசுதேவன் , மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் தனஞ்செயன்    மற்றும்  ஆகியோரும் அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டனர் .
அத்தோடு அடிகளாரின் பற்றாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும்  நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 










No comments

Subscribe Us