Column Left

Vettri

Breaking News

சர்வதேச தொழு நோய் தினத்தை முன்னிட்டு நிகழ்வு




 பாறுக் ஷிஹான்

சர்வதேச தொழு நோய் தினத்தை முன்னிட்டு  விசேட விழிப்புணர்வு நிகழ்வும் தோல் நோய் சிகிச்சையும் சிறப்பாக  நடைபெற்றது.

இந்நிகழ்வானது  சம்மாந்துறை  சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் .எம் எம் நௌஷாத் தலைமையில் வளத்தாப்பிட்டி  கிறேஸ் முன்பள்ளி  கட்டிடத்தில் இன்று  நடை பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனைக்கமைய இந்நிகழ்வில்  பிராந்திய தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சி.எம்.பஸால் , சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை தோல் நோய் பிரிவு வைத்தியர் வைத்தியர் திருமதி உனைசியா , மற்றும் சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர்கள் ,பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ,  உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் சம்மாந்துறை பிராந்தியத்தில் அதிக தொழு நோயாளர்கள்    இனங்காணப்பட்டுள்ள நிலையில் தொழுநோய் தினம் வருடம் தோறும் டிசம்பர் மாதம் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் அனுஸ்டிக்கப்படுவதுடன் மாத்திரைகளை சரியாக  உட்கொள்ளும் பட்சத்தில் ஒருவருடத்தினுள் தொழு நோயை முற்றாக குணமாக்கிவிடலாம் என குறிப்பிடப்படுகின்றது.

இந்நிகழ்வுகளுக்கு  Alliance Development Trust அனுசரனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.






No comments

Subscribe Us