Column Left

Vettri

Breaking News

இன்றைய வானிலை!!




 இன்றையதினம் (05) நாட்டின் சப்ரகமுவ, தென், ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழை அற்ற வானிலை நிலவும் வாய்ப்பு காணப்படுகின்றது.

இதேவேளை, நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடல் பகுதிகளில்
பேருவளையிலிருந்து மாத்தறை ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments

Subscribe Us