Column Left

Vettri

Breaking News

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை!!




பாறுக் ஷிஹான்

ஐஸ் போதைப்பொருளுடன்  கைதான  இளைஞனிடம் மேலதிக  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட   கடற்கரை பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கடந்த  சனிக்கிழமை (28) இரவு  களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப் படையினரால்  கைது செய்யப்பட்டிருந்தார்.

 களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருக்கு  கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை  நடவடிக்கைகளின் போது  நிந்தவூர் 07 பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைதான   சந்தேக நபரிடம் இருந்து 2 கிராம் 580 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன்  சந்தேக நபர் உள்ளிட்ட  சான்றுப்பொருட்கள் என்பன  சட்ட நடவடிக்கைக்காக  நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மற்றும் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர்   மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Subscribe Us