Column Left

Vettri

Breaking News

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவி தற்கொலை!!




 விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த மாணவி நேற்று (23) பிற்பகல் மற்றுமொரு நண்பியுடன் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நீரில் மூழ்கிய இரு மாணவிகளில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளதுடன், காணாமல் போன மற்றைய மாணவியின் சடலம் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தெல்தெனிய, புடலுஉயன பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவி தனது தோழியின் கையைப் பிடித்தவாறு நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிர் பிழைத்த மாணவி தற்போது கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள நிலையில், தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த மாணவி தனது காதலுக்கு பிரதேசவாசிகள் மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அவர் எழுதிய கடிதத்தின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments

Subscribe Us