Column Left

Vettri

Breaking News

அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வெற்றி பிரகாசமாகவுள்ளது - வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷ்!!




செ.துஜியந்தன் 

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் என்றுமில்லாதவாறு இலங்கை தமிழரசுக்கட்சிக்கு பின்னால் அணிதிரண்டுள்ளனர். நவம்பர் 14ஆம் திகதி அம்பாறை தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் வெற்றிபெறும் வாய்ப்பு மிகபிரகாசமாகவுள்ளது.என அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷ் தெரிவித்தார். இன்று (10) பாண்டிருப்பு வீட்டுதிட்டத்தில் உரையாற்றியபோதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் 

கடந்த முறை போல் அம்பாறை மாவட்டத்தில் எமது தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு பலர் களமிறங்கியுள்ளனர். இவர்கள் எல்லாம் மாற்றுக்கட்சிகளை வெல்லவைப்பதற்கே போட்டியிடுகின்றனர்.  தேர்தல் காலத்தில் மட்டும் இங்குள்ள தமிழ் மக்களின் மீது பாசம் பொங்கிவழிகிறது. ஏனைய காலங்களில் எம் மக்களை ஏன் என்று கேட்கவும் எவரும் வருவதில்லை.  அன்று முதல் இன்று வரை எம் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிமைக்குரல் எழுப்பிவரும் தன்மானமுள்ள கட்சியாக இலங்கை தமிழரசுக்கட்சியேயுள்ளது.

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் எமது மாவட்டத்தில்  இரண்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை எம் மக்கள் தவறவிடக்கூடாது.  அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் வாக்களிக்க வேண்டும்.  இங்கு வாழும் மக்கள் அபிவிருத்தி என்றால் என்ன என்று தெரியாதவர்களாக உள்ளனர்.  இருக்க வீடு இல்லை, குடிக்க குடிநீர் இல்லை, சாப்பிட வழியில்லை, கிராமங்களில் ஒழுங்கான பாதைகள் இல்லை இப்படி ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. தமிழ் மக்கள் உரிமைக்காக குரல் எழுப்பும் போது அவர்களது அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வினையும் அரசாங்கத்திடம் கேட்டுப்பெறவேண்டும் இம்முறை என்னை வெற்றி பெறச்செய்தால் உங்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷ் தெரிவித்தார்

No comments

Subscribe Us