Column Left

Vettri

Breaking News

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக சுஜாதா நியமனம்!!





( வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளரும், கிழக்கு மாகாண பதில் மாகாணக் கல்விப் பணிப்பாளருமான திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் இலங்கை கல்வி நிர்வாக சேவை விசேட தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.

அவர் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டு, ( Addl. Commissioner General of Publications, MOE, Isurupaya,Battaramulla.) நேற்று (19) செவ்வாய்க்கிழமை தமது கடமையை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனால் மட்டக்களப்பு வலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் வெற்றிடமும், கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் வெற்றிடமும் ஏற்பட்டுள்ளது.

No comments

Subscribe Us