Column Left

Vettri

Breaking News

100 கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு




 இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செவனகல பிரதேசத்தில் 40 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.


No comments

Subscribe Us